குழந்தைகளுடன் நின்ற நரிக்குறவர்களை ஏற்றாமல் சென்ற பேருந்து.. போதையில் நடுரோட்டில் ரகளை செய்த தம்பதி - திருப்பத்தூரில் பரபரப்பு

x
  • வாணியம்பாடி அருகே நரிக்குறவரின தம்பதியை பேருந்தில் ஏற்றாமல் சென்றதால், சாலையின் குறுக்கே கற்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • திருப்பத்தூர் மாவட்டம், செட்டியப்பனூர் பேருந்து நிலையத்தில் நரிக்குறவரின தம்பதி 3 குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்தனர்.
  • அந்த வழியாக சென்ற பேருந்து, அவர்களை ஏற்றாமல் சென்றதாகக் கூறப்படுகிறது.
  • போதையில் இருந்த அந்த தம்பதி, இதனால் ஆத்திரமடைந்து சாலையின் குறுக்கே கற்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவர்களிடம் சமாதானம் பேசி பணம் கொடுத்து ஆட்டோவில் அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்