எருது விடும் விழா -இளைஞர் உயிரிழப்பு... 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

x

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே நடைபெற்ற எருது விடும் விழாவில் காளை முட்டியதில் ஒரு இளைஞர் உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த உமையப்பநாயக்கனூரில் எருது விடும் விழா நடைபெற்றது. விழாவினை வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் தலைமையிலான வருவாய்த்துறையினர் உறுதிமொழி ஏற்று துவக்கி வைத்தனர். வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றனர்.

மிகக் குறைந்த வினாடிகளில் குறிப்பிட்ட இலக்கை அடைந்த 63 காளைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதனிடையே, விழாவினை பார்க்கக வந்த பீளமேடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான இளைஞர் சக்திவேல் மாடு முட்டியதில் தூக்கி வீசப்பட்டார்.

உடனடியாக அவரை விழா குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்