திருப்பதி மலையில் அரசு பஸ் திடீர் விபத்து... முந்தி செல்ல முயன்றபோது விபரீதம்

x

திருப்பதி மலை பாதையில், 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, முன்னால் சென்றுக் கொண்டிருந்த வாகனத்தை, முந்தி செல்ல முயன்றது. அப்போது, மலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவரின் மீது ஏறி விபத்திற்குள்ளானது. பேருந்தின் கண்ணாடிகள் உடைந்த நிலையில், பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதனிடையே, பேருந்தை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்