இறந்த மனைவியை தோளில் தூக்கி ஒடிசா நோக்கி நடந்தே சென்ற வடமாநிலத்தவர் - கல் மனதையும் கரைக்கும் துயரம்

x

இறந்த மனைவியின் உடலை ஆந்திராவில் இருந்து ஒடிசாவுக்கு நடந்தே சுமந்து சென்று கொண்டிருந்த நபருக்கு உதவிய போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த மாநிலம் அனுப்பி வைத்தனர்.

ஒடிசா மாநிலம் சரோடா கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சாமுலுவின் மனைவி இடுகுருவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.

ஒடிசாவில் போதிய சிகிச்சை அளிக்க முடியாததால், ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இடுகுருவை அனுமதித்தார் சாமுலு.

ஆனால் அங்கு சிகிச்சைக்கு இடுகுருவின் உடல் ஒத்துழைக்காத நிலையில், அவரை அழைத்துச் செல்லுமாறு சாமுலுவிடம் மருத்துவர்கள் கூறி விட்டனர்.

உடல்நிலை சரியில்லாத மனைவியை பேருந்தில் அழைத்துச் செல்ல இயலாது என்பதால் ஆட்டோவில் அழைத்துச் சென்றார் சாமுலு. விஜயநகரம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று இடுகுரு உயிரிழந்தார்.

ஆட்டோ ஓட்டுநர் வழியிலேயே இறக்கி விடவே, கையில் பணம் இல்லாததால் மனைவியை தோளில் சுமந்து கொண்டு ஆந்திராவில் இருந்து ஒடிசாவுக்கு நடந்தே புறப்பட்டார் சாமுலு.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் அளிக்கவே, விரைந்து வந்த போலீசார் ஒடிசாவில் உள்ள சாமுலுவின் நண்பர்களைத் தொடர்பு கொண்டு பேசி, ஆம்புலன்ஸ் மூலம் இடுகுருவின் உடலை சொந்த ஊர் வரை செல்ல கட்டணம் இன்றி அனுப்பி வைத்தனர்.

மனிதநேயமிக்க காவலர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்