பசுவை வணங்க வந்த பா.ஜ.க. எம்.பி...மீண்டும் மீண்டும் எட்டி உதைத்ததால் பரபரப்பு

x

ஆந்திராவில் பா.ஜ.க. எம்.பி. ஒருவர் பசுவை தொட்டு வணங்க முயன்ற போது அது பின்னங்காலால் உதைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பா.ஜ.க எம்.பி நரசிம்ம ராவ் என்பவர் குண்டூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அப்போது கட்டி வைக்கப்பட்ட பசுமாடு ஒன்றை தொட்டு அவர் வணங்க முயன்றபோது, மாடு எம்.பி.யை எட்டி உதைத்தது. பின்னர் உரிமையாளர் பசுவை பிடித்து கொண்டதையடுத்து எம்.பி. அருகே சென்ற போது அவரை பசு மீண்டும் எட்டி உதைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த எம்.பி. அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்