தொடர் விபத்தால் திணறிய திருமலா... யாகம் நடத்தி விபத்தை குறைக்க முயற்சி

x

திருப்பதி ஏழுமலையான் கோவில்.........அஞ்சனாத்ரி, கருடாத்ரி, வெங்கடாத்ரி, நாராயணாத்ரி, ரிஷபாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி ஆகிய 7 மலைகளின் மீது, சுமார் 3000 அடி உயரத்தில் அமைந்த ஒரு திருக்கோவில். பல புராதன சிறப்பு மிக்க இந்த ஆலயத்திற்கு உலகெங்கும் இருந்து தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.விஷேஷ நாட்களில் 5 லட்சம் வரை பக்தர்கள் வருவதுண்டு. இந்த பக்தர்கள் மலைமீது ஏறி வருவதற்கு 3200 படிகட்டுகள் கொண்ட நடைபாதை வசதியும், 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ரோடு வசதியும் உண்டு.

வலைந்து நெலிந்து செல்லும் மலைப்பாதையில் பேருந்துகளும், கார்களும், ஆம்னி வேன்களும் இரவு பகல் என 24 மணி நேரமும் வரிசை கட்டும். நேர்வழி என்றாலே விபத்துக்கள் சர்வசாதாரணமாக நிகழும் போது, மலைப்பாதை என்றால் சொல்லவா வேண்டும்...? அந்த பயணத்தில் சில நேரங்களில் தவிர்க்க முடியாத விபத்துகள் நடந்து விடுகின்றன. கடந்த மாதத்தில் மட்டும் இந்த விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. இதனை தடுப்பதற்காக, திருமலை தேவஸ்தானமும், காவல்துறையும் வாகன ஓட்டுநர்களின் முகத்தில் தண்ணீர் அடிப்பது,வேக கட்டுப்பாடு அறிவுறைகள் என கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்னாதான் கண்ணில் விளக்கெண்ணைய் ஊற்றி பாதுகாத்தாலும் நடப்பதை யாரால் மாற்ற முடியும் என்பதை போல, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 விபத்துகள் ஏற்பட்டுள்ளது இதில் பஸ்ஸில் பயணித்த பயணிகள் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.நல்லவேளையாக உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் பயந்து போன திருமலை தேவஸ்தானம், மக்களின் நலன் கருதியும், விலை உயர்ந்த வாகனங்கள் சுக்கு நூறாய் நொறுங்கி பாழாவதை தடுக்கவும் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

அதுதான் மகாசாந்தி ஹோமம்...... விஞ்ஞான வளர்ச்சிகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு, நடக்கும் விபத்துகளுக்கு முட்டு கட்டை போட ஒரு மகா யாகத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. யாகம் நடத்தினால், எல்லாம் சரியாகிடுமா என்ற கேள்விக்கு ஒரு வரலாற்று கதையையும் கூறுகிறது தேவஸ்தானம்.ஆம்...கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்று நடந்த தொடர் விபத்துகளை தவிர்க்க மகாசாந்தி யாகம் நடத்தப்பட்டதாம். அதன் பின் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. பல வருடங்கள் கழித்து மீண்டும் அதே யுக்தியை கையில் எடுத்திருக்கிறது கோவில் நிர்வாகம். விஞ்ஞானம் விண்ணை தாண்டு வளர்ந்த போதும், விபத்தை தடுக்க தேவஸ்தானம் எடுத்திருக்கும் இந்த விசித்திர யாகத்தின் பலனை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Next Story

மேலும் செய்திகள்