ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிய 7 மாத குழந்தையை கடத்தி சென்ற டிப்-டாப் ஆசாமி-ஷாக் சிசிடிவி காட்சி

x

உத்தரபிரதேசத்தில் ரயில்வே நிலையத்தில் தாயுடன் தூங்கி கொண்டிருந்த 7 மாத குழந்தையை ஒருவர் தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மதுரா ரயில் நிலையத்தில், 7 மாத குழந்தையுடன் தாய் படுத்து தூங்கியுள்ளார். அவ்வழியாக வந்த ஒருவர் குழந்தையை நோட்டமிட்டதுடன், யாருமில்லாத நேரத்தில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை தூக்கி கொண்டு ஓடுகிறார். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. குழந்தையை காணவில்லை என பெற்றோர் புகார் அளித்த நிலையில், சிசிடிவி கேரமராவில் பதிவானஅடையாளத்தை வைத்து அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்