ட்விட்டர் ஊழியர்களுக்கு காலக்கெடு -வழிநடத்த புதிய தலைவர்? -அடுத்தடுத்து அதிரடி காட்டும் எலான் மஸ்க்

x

ட்விட்டரை வழிநடத்த புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க உள்ளதாக ட்விட்டர் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது...

ட்விட்டரில் தான் செலவழிக்கும் நேரத்தைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள எலான் மஸ்க், இந்த சமூக வலைதள நிறுவனத்தை நடத்த புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்...

அத்துடன் இந்த வாரத்தில் டிவிட்டரின் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நேற்று ட்விட்டர் ஊழியர்களுக்கு மஸ்க் அனுப்பி இருந்த மின்னஞ்சலில், "ஊழியர்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டுமா அல்லது 3 மாத ஊதியம் துண்டிக்கப்பட வேண்டுமா?" என வியாழக் கிழமைக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்