விவசாயியை தாக்கிய புலி - சிகிச்சையின் போது நேர்ந்த சோகம்

x

கேரள மாநிலம் வயநாட்டில் புலி தாக்கி படுகாயமடைந்த விவசாயி, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பள்ளிப்புரம் பகுதியைச் சேர்ந்த சாலு என்பவர், விவசாய நிலத்தில் புல் வெட்டிய போது, திடீரென வந்த புலி அவரை கடுமையாக தாக்கியது.

இதில் படுகாயமடைந்த சாலு, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இதற்கிடையில், மாரடைப்பு ஏற்பட்டு சாலு உயிரிழந்தார்

. அவரது குடும்பத்துக்கு கேரள அரசு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. இதனிடையே, சாலுவை தாக்கிய புலியை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்