துணிவு, வாரிசு டிக்கெட்டுகள் - போலீசாருடன் மோதிய ரசிகர்கள்

x

கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் வாரிசு, துணிவு படங்களுக்காக முன்பதிவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த நிலையில் டிக்கெட் கேட்டு ரசிகர்கள் டிக்கெட் கவுண்டரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முதல் காட்சிக்கான டிக்கெட் விநியோகம் செய்யும் முறை ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் அதற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் முடிவடைந்த நிலையிலும் டிக்கெட்டை கேட்டு ரசிகர் பட்டாளம் கவுண்டரில் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்தும் பணியின் போது போலீசாருக்கும் ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்