ரசிகர்களே ரெடியா இருங்க.. மிகுந்த எதிர்பார்ப்பில் 'துணிவு' டிரெய்லர் -அஜித் CHARACTOR என்ன தெரியுமா?

x

துணிவு திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு தீவிர புரமோசனில் இறங்கியுள்ள படக்குழு, படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி நடிகை மஞ்சு வாரியார் கண்மணி என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் சமுத்திரக்கனி தயாளன் என்ற பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாகவும், சார்பட்டா பட புகழ் ஜான் கொக்கன் கிரிஸ் என்ற பாத்திரத்திலும் நடித்துள்ளனர். நடிகர் வீரா, ஜி.எம். சுந்தர், நடிகர் பக்ஸ் உள்ளிட்டோர் கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எனினும், அஜித்குமாரின் கதாபாத்திரத்தை மட்டும் சஸ்பென்ஸாக வைத்து படக்குழு, இன்று இரவு 7 மணிக்கு டிரெய்லர் வெளியாகும் என்ற அறிவிப்பை பகிர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்