சிப்ஸ் தயாரிக்கும் மெஷினை ஆன் செய்ததும் தூக்கி எறியப்பட்ட ஊழியர் - மருத்துவமனைக்கு போகும் வழியில் பிரிந்த உயிர்

x
  • மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • திருவொற்றியூர், ஒத்தவாடை தெருவில் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் சிறுதொழில் நிறுவனம் இயங்கி வருகிறது.
  • இங்கு வேலை பார்க்கும் 21 வயது இளைஞரான ரவி, வழக்கம் போல் சிப்ஸ் தயாரிக்கும் மெஷினை ஆன் செய்துள்ளார்.
  • அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில், ரவி தூக்கி எறியப்பட்டார்.
  • இதனையடுத்து உடனே அவரை மீட்ட சக ஊழியர்கள் முதலில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
  • பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
  • இது குறித்து சாத்தாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்