ரேஷன் கடை ஊழியரிடம் கூடுதல் பொருட்கள் கேட்டு மிரட்டல் - தி.மு.க. முன்னாள் நிர்வாகி உட்பட இருவர் கைது

x

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ரேஷன் கடை ஊழியரிடம் கூடுதல் பொருட்கள் கேட்டு மிரட்டிய வீடியோ வெளியானதை தொடர்ந்து இருவரை போலீசார் கைது செய்தனர். வேடசந்தூர் எஸ்.ஏ.பி நகரில் செயல்படும் ரேஷன் கடையில், மேனகா என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த கடைக்கு வந்த முன்னாள் தி.மு.க நகர அவைத்தலைவர் அமீர் பாட்சா என்பவர், 10 ரேஷன் கார்டுகளை கையில் வைத்துக்கொண்டு பொருட்களை கேட்டு மிரட்டியுள்ளார். அதை அவருடன் வந்த நெல்சன் என்பவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இதுகுறித்த புகாரின்பேரில் அமீர் பாட்சா, நெல்சன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்