மூன்றாண்டு காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த காதலன்.. -தர்ணாவில் இறங்கிய இளம்பெண்ணால் பரபரப்பு

• செட்டிகுளம் பகுதியில் காதலன் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. • தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளம் அருகே உள்ள செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் உதயா. • இவர் தனது தந்தையுடன் பந்தல் மற்றும் ஆடியோ சர்வீஸ் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டின் முன் நேற்று ரூபா என்ற பெண் தர்ணாவில் ஈடுபட்டார். • இது குறித்து போலீசார் விசாரிக்கையில் தானும், உதயாவும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், தன்னை உதயா திருமணம் செய்ய மறுப்பதாகவும் தெரிவித்தார். • இதனையடுத்து, இதுகுறித்து உரிய விசாரணை நடத்துவோம் என காவல்துறையினர் உறுதியளித்த நிலையில் அந்த பெண் தனது தர்ணாவை முடித்துக்கொண்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com