'Adidas' போலவே பட்டைகளை தயாரித்த 'Thom Browne' - அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

காலணிகள், ஆடை வடிவமைப்பு பன்னாட்டு நிறுவனமான அடிடாஸ், போட்டி நிறுவனமான தாம் ப்ரவுனிடம் ஒரு வழக்கில் தோல்வியைத் தழுவியுள்ளது... அடிடாஸ் நிறுவனம் கடந்த 2021ல் நியூயார்க் ஆடை வடிவமைப்பு நிறுவனமான தாம் ப்ரவுனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது.

அதன்படி, தாம் ப்ரவுன் தயாரிப்புகளில் உள்ள 4 பட்டைகள், அடி டாஸ் தயாரிப்புகளில் உள்ள 3 பட்டைகளுடன் ஒத்துப் போவதால் நுகர்வோரிடையே இது குழப்பத்தை ஏற்படுத்துவதாக எதிர் நிறுவனத்திடம் நஷ்ட ஈடு கோரப்பட்டது.

இந்நிலையில், மாறுபட்ட எண்ணிக்கையிலேயே பட்டைகள் இருப்பதால் அமெரிக்க நீதிமன்றம் தாம் ப்ரவுனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com