"இந்த பாம்பு கடிச்சா கடிபட்டவர் இறந்துட்டாரானு சுடுகாடு போய் பார்க்கும்" - திகில் கிளப்பிய வீடியோ

x

பாம்பை பிடித்து தீயணைப்பு வீரர், வித்தை காட்டியது மட்டுமின்றி, பாம்பு குறித்த கட்டுக்கதைகளை கூறியது பொதுமக்களை முகம் சுளிக்கச் செய்தது.திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை பகுதியில் நின்றுருந்த காரில், மரத்திலிருந்து விழுந்த பாம்பு ஒன்று புகுந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், காரில் பதுங்கியிருந்த பாம்பை மீட்டனர். அப்போது, தீயணைப்பு வீரர் சிவக்குமார், பாம்பை பிடித்து வித்தை காட்டினார். மேலும், இந்தப் பாம்பு கடித்து விட்டால், கடிபட்டவர் இறந்துவிட்டாரா என சுடுகாட்டில் வந்து எட்டிப் பார்க்கும் என்று கட்டுக் கதைகளையும் அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தார். இது அங்கிருந்த பொதுமக்களை முகம் சுளிக்கச் செய்தது.


Next Story

மேலும் செய்திகள்