ஸ்ரீமதி மரணம் தொடர்பான அத்தனை சர்ச்சைக்கும் இந்த அறிக்கை முடிவுகள் பதிலாக இருக்கலாம்.!!

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வந்த ஸ்ரீமதி கடந்த மாதம் 13 ஆம் தேதி உயிரிழந்தார். இவரின் முதல் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி மறு பிரேத பரிசோதனையும் நடந்தது. இதனிடையே இந்த 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்ய நீதிமன்றம் குழு அமைத்து உத்தரவிட்டது. அதன்படி அந்த குழுவானது இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஆய்வு செய்துள்ளனர். இந்த அறிக்கையானது இன்று அல்லது நாளைக்குள் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஸ்ரீமதி மரணம் தொடர்பான அத்தனை சர்ச்சைக்கும் இந்த அறிக்கை முடிவுகள் பதிலாக இருக்கலாம் என்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்