"இது தமிழர்களின் அடையாளம்.." பட்ஜெட் குறித்த கருத்தரங்கில் பிரதமர் மோடி பெருமிதம்

x

உட்கட்டமைப்பு மற்றும் மூலதனம் என்ற தலைப்பில் நடைபெறும் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய கருத்தரங்கில் பிரதமர் மோதி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, எந்த ஒரு நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கும் உட்கட்டமைப்பு எப்போதும் மிக முக்கிய பங்காக இருந்து வந்திருக்கிறது என தெரிவித்த பிரதமர் மோடி, உட்கட்டமைப்பின் வரலாற்றை படித்தவர்கள் இதனை நன்கறிவார்கள் என தெரிவித்தார். துரதிஷ்டவசமாக இந்திய விடுதலைக்குப் பின்னர் நவீன உட்கட்டமைப்பிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனவும், 2014ம் ஆண்டுக்கு பின்னர் நாட்டின் சராசரி தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு இரண்டு மடங்காகி இருப்பதாகவும் தெரிவித்தார். சோழர்களால் கட்டப்பட்ட கல்லணை 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என தெரிவித்த பிரதமர் மோடி, இந்த அணை இன்றளவும் இயங்கி வருவது குறித்து மக்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவார்கள் என்றும் கல்லணை போன்ற பழமையான ஒரு அணை அப்பகுதிக்கு இன்றளவும் வளர்ச்சியை வழங்கி வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்