நாட்டிலேயே இது தான் முதல் முறை... மசோதாவில் முழுக்க முழுக்க 'பெண் பாலினம்... கேரளா சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

x

கேரளாவில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சுகாதார மசோதாவில், இந்தியாவிலேயே முதல் முறையாக ஆண் பாலினத்திற்கு பதிலாக முழுக்க முழுக்க பெண் பாலினம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் மக்கள் நலனுக்காக இயற்றப்பட்டுள்ள சட்டங்கள் அனைத்தும் ஆண் பாலினத்தின் பெயரிலேயே இயற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், முதல் முறையாக அவனுக்கு பதிலாக அவள், அதாவது அவள் என்ற பெண் பாலினத்திற்குள் அவன் உள்ளிட்ட அனைத்து பாலினங்களும் அடங்கும் என்ற வகையில் முழுக்க முழுக்க பெண் பாலினத்தை பயன்படுத்தி இந்த சட்ட மசோதாவை கேரளா நிறைவேற்றியுள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக... மருத்துவர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க இந்த மசோதா வழிவகை செய்ய உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்