இந்தியாவிலே இதான் ஃபர்ஸ்ட் டைம்.. ஒரு மாநில அரசு செய்த சிறப்பான சம்பவம் - புது பாய்ச்சல்.. இத பாத்தா அசந்து போய்டுவீங்க

x

இந்தியாவிலே முதல்முறை தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்த அறிமுகம் செய்திருக்கும் மணற்கேணி செயலி குறித்த தொகுப்பு உங்கள் பார்வைக்கு...

ஆசிரியர் பாடம் எடுக்க... பாடங்கள் 3D அனிமேசன் விளக்கப்படம் வாயிலாக எளிதாக புரியும்படி காணொளிகள் அமைந்திருக்கும் இந்த செயலிதான் தமிழக அரசு அறிமுகம் செய்திருக்கும் மணற்கேணி செயலி..

பேருக்கு ஏற்றார்போல் மாணவர்கள் விரும்பும் பாடங்களை எல்லாம் வீடியோவாக அள்ளிக்கொடுக்கிறது.

செயலியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் மாநில பாடத்திட்ட பாடங்கள் அனைத்தும் காணொளியாக இடம்பெற்று உள்ளது. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் பாடங்கள் இடம்பெற்றுள்ளது.

பாடங்களை ஆசிரியர்கள் எளிமையாக விளக்குகிறார்கள்... 27 ஆயிரம் கருப்பொருள்களாக வகுப்புகள் தாண்டி வகை பிரித்து அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கப் பாடங்களை உருவாக்கி அளித்திருக்கிறது தமிழக பள்ளிக் கல்வித்துறை.

நாட்டிலேயே முதன் முதலாக ஒரு மாநில அரசு தன்னிடமுள்ள வல்லுனர்களை கொண்டு உருவாக்கியுள்ள செயலி...

தாம்பரம் சேலையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மணற்கேணி செயலி அறிமுகம் செய்யப்பட்டது

விழாவில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், செயலி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சிகரமான கற்றலை உருவாக்கும் என நம்பிக்கையை தெரிவித்தார்...

தமிழக அரசு எடுத்திருக்கும் இந்த முன்னெடுப்பு வாயிலாக 25 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

செயலி வெளியானதுமே பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளுக்கு செயலியை தரவிறக்கம் செய்து, பாடம் கற்க உதவி செய்ய தொடங்கிவிட்டார்கள்

செயலியில் பாடங்களை படிக்க தொடங்கிவிட்ட மாணவர்கள், செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்கிறார்கள்

இணைய வளர்ச்சியில் ஏற்கனவே புரியாத பாடங்களை ஆன்-லைனில் மாணவர்கள் படிக்க தொடங்கிவிட்டார்கள்... அப்படி படிக்க விரும்புபவர்கள் ஒன்று பணம் கட்டி படிக்க வேண்டிய நிலை உள்ளது அல்லது விளம்பரங்களை கடந்து பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. இப்போது தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் இந்த செயலியோ தகவல் களஞ்சியமாகவே விளங்குகிறது. விளம்பரம் வாயிலாக திசை திருப்பும் இன்னல் இல்லாமல் இல்லத்திலே குழந்தைகள் படிக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது என பெற்றோர்களும் தெரிவிக்கிறார்கள்...

தமிழக அரசின் இந்த பாய்ச்சல் பள்ளிக் கல்வித்துறையில் உச்சம் எட்ட உதவும் என்பதே கல்வியாளர்கள் கருத்தாக இருக்கிறது


Next Story

மேலும் செய்திகள்