"இது எங்களுக்கு கிடைத்த வெற்றி அல்ல" - கே.பாக்யராஜ் பரபரப்பு பேட்டி

x

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் பாக்யராஜ் 192 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் 152 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். சென்னை வடபழனியில் உள்ள திரையிசைக் கலைஞர்கள் சங்கத்தில், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி செந்தில்நாதன் தலைமையில் இந்த தேர்தல் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் பதவிக்கு நடந்த தேர்தலில், பாக்யராஜ் அணியைச் சேர்ந்த லியாகத் அலிகான் 191 வாக்குகள் பெற்றும், பொருளாளர் பதவிக்கு அதே அணியைச் சேர்ந்த பாலசேகரன் 176 வாக்குகள் பெற்றும் வெற்றி பெற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்