கோலாகலமாக நடைபெற்ற திருவெறும்பூர் ஜல்லிக்கட்டு... 873 காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

கோலாகலமாக நடைபெற்ற திருவெறும்பூர் ஜல்லிக்கட்டு... 873 காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
Published on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருவெறும்பூர் அடுத்த கூத்தைப்பார் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.

இதில், 873 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுகளை காளைகளை அடக்கினார்கள்.

16 காளைகளை அடக்கிய மனோஜ் என்பவருக்கு முதல் பரிசாக குளிர்பதன பெட்டியும், 12 காளைகளை அடக்கிய ஹரி என்பவருக்கு வாஷிங் மெஷினும், 10 காளைகளை அடக்கி மூன்றாம் இடத்தைப் பிடித்த கலை மற்றும் கிருபாகரன் ஆகியோருக்கு ஏர்கூலர் எந்திரமும் பரிசாக வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியில் 6 மாடுபிடி வீரர்கள் உள்பட 19 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேர், திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

X

Thanthi TV
www.thanthitv.com