வண்டிக்குள் கேட்ட சத்தம்...ஆக்ரோஷமாக சீரிய பாம்பு - பதைபதைக்கும் காட்சிகள்

x

திருவாரூரில் ஸ்கூட்டியின் முகப்பு விளக்குக்குள், சிக்கிய நாகப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சேகர் என்பவருக்கு சொந்தமான ஸ்கூட்டியின் முகப்பு விளக்குக்குள், நல்ல பாம்பு ஒன்று இருப்பதை கண்டு, தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர், ஒரு மணி நேரம் போராடி 7 அடி நீளம் கொண்ட பாம்பை பிடித்தனர். அப்போது நாகப்பாம்பு சீறிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்