திருவிழா பார்த்து விட்டு தண்டவாளத்தில் படுத்திருந்த இளைஞர்கள்.. ரயில் மோதி பயங்கரம் -திருவாரூரில் அதிர்ச்சி

x

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், கோயில் திருவிழாவை பார்த்துவிட்டு ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த 2 இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்தனர். உப்பூர் ஆலங்காடு பகுதியில் மாரியம்மன் கோயில் திருவிழா நேற்றிரவு நடைபெற்றது. இதில், நாகை தெற்குபிடாகை மேலமருதூரை சேர்ந்த முருகபாண்டியன், உப்பூரை சேர்ந்த அருள், கோபாலசமுத்திரத்தை சேர்ந்த பரத்குமார் ஆகியோர் பங்கேற்றுவிட்டு, அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மோதி, அருள் மற்றும் முருகபாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பரத் படுகாயத்துடன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்