காதலிக்கு கல்தா கொடுத்த காதலன் - புகைப்படங்களை வெளியிட காதலி

x

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் திருவனாதபுரத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென பெண்ணுடன் பேச மறுத்த ராஜேஷ், வேறோரு பெண்ணுடன் பழகி வருவதாக கூறி இளம் பெண் போலீசில் புகாரளித்தார். இதனிடையே, பெண்ணிடம் இருந்து நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் வரையிலான பணத்தை ராஜேஷ் வாங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இளம் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பெண்ணை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், தலைமறைவான ராஜேஷ் போலீசார் தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்