ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் மீது கல்வீசி தாக்கிய பொதுமக்கள்

x

திருத்துறைப்பூண்டி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது, பொதுமக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில், பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.

கொருக்கை கண்ணன் மேடு பகுதியில், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், கல்வீசி தாக்குதல் நடத்தியதில் ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடி உடைந்தது.

மேலும், படுகாயமடைந்த பொதுப்பணித்துறை அதிகாரி செல்வம் என்பவர், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார், தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

முன்னதாக, ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கோரி வழக்கு தொடர்ந்த மாதா ராமன் என்பவரை நான்கு பேர் சரமாரியாக தாக்கினர்.

இதில் படுகாயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்