பயணிகளை ஏற்றியதால் சரமாரி தாக்குதல் ... ரத்தம் சொட்ட நின்ற அரசுப்பேருந்து ஓட்டுநர்

x

செங்கத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பேருந்தின் ஓட்டுநர் வழியில் டிக்கெட் ஏற்றியதால் அவரை தனியார் பேருந்து ஓட்டுநர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறையூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி சென்ற போது அதனை பின் தொடர்ந்து வந்த தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் ஊழியர்கள், அரசு பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கினர்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் சீனிவாசன் ரத்தம் சொட்ட சொட்ட அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்