மரத்தில் தூக்கில் தொங்கியபடி கிடந்த சிறுவன்... விடுதி வளாகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

x

திருவண்ணாமலையில், அரசினர் மாணவ விடுதி வளாகத்தில், தூக்கில் தொங்கியபடி கிடந்த 16 வயது சிறுவனின் உடலை போலீசார் மீட்டனர். திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் பின்புறம், விடுதி வளாகத்தில் உள்ள மரத்தில், தூக்கில் தொங்கியபடி சிறுவன் கிடந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்