அசுர வேகத்தால் சிறுவன் பலி...தனியார் பஸ் டிரைவருக்கு சரமாரி அடி - கண்ணாடியை அடித்து நொறுக்கிய மக்கள்

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, தனியார் பேருந்து மோதி 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், பேருந்தின் கண்ணாடிகளை உடைத்ததுடன், ஓட்டுநரை கிராம மக்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. வாணியம்பாடி அடுத்த நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் - பானுமதி தம்பதியின் 8 வயது மகன் தரணி. பானுமதி தனது தாய் வீட்டிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல, கலந்திரா தேசிய நெடுஞ்சாலை ஓரம் பேருந்துக்காக காத்திருந்துள்ளனர். அப்போது, திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி வேகமாக தனியார் பேருந்து வந்தபோது, அதனை கவனிக்காமல் சிறுவன் ஓடியதாக கூறப்படுகிறது. இதில், பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், தனியார் பேருந்தை சிறை பிடித்ததுடன், அதன் கண்ணாடிகளை உடைத்தனர். மேலும், பேருந்து ஓட்டுநர் பாஸ்கர் என்பவரை சரமாரியாக தாக்கி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்