அடேங்கப்பா இவ்வளவு காணிக்கையா !..."எண்ண முடியாம டயர்டு ஆகுதே"

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு, ஆண்டு தொடக்கத்திலிருந்து தற்போது வரை, சுமார் இரண்டரை கோடி ரூபாய் உண்டியல் வருமானமாக கிடைத்துள்ளது. சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கை, மாதம் 2 முறை எண்ணப்படும். அந்தவகையில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ஜனவரி மாதத்தில் இதுவரை, 2 கோடியே 48 லட்சம் ரூபாயை பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பக்தர்கள், ஆயிரத்து168 கிராம் தங்கத்தையும், 17 ஆயிரத்து 300 கிராம் வெள்ளியையும் உண்டியல் காணிக்கையாக செலுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்