நெஞ்சை நிமிர்த்தி, ஒய்யாரமாக வந்த கொள்ளையர்கள் - அலார சத்தம் கேட்டதும் தெறித்து ஓடிய காட்சி

x

பர்கூர் அருகே, ஆள் இல்லாத வீட்டில் திருட வந்த கொள்ளையர்கள், அலாரம் அடித்ததால், தெறித்து ஓடியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் பகுதியில், கடந்த ஆறு மாதங்களாக பூட்டி இருக்கும் வீட்டை நோட்டமிட்ட திருடர்கள், கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். இதனிடையே, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், சுற்றுப்புற சுவர் ஏறி குதித்து, பூட்டிய வீட்டில் பட்டாக்கத்தியுடன் ஒய்யாரமாக நடந்து வந்தனர். இதனிடையே, வீட்டின் உரிமையாளர் பொருத்தி இருந்த அலாரம் அடித்ததால், செய்வதறியாது தெறித்து ஓடினர்.


Next Story

மேலும் செய்திகள்