"அவங்களுக்கு பிசிசிஐ, டிஎன்சிஏ இருக்கு..எங்களுக்கு என்ன இருக்கு...?" - சிவக்குமார், தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்

x

பிசிசிஐ, டிஎன்சிஏ போன்று மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரா்களுக்கும் அமைப்பு வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்கம் சார்பில் தென்னிந்திய டி20 சாம்பியன்ஷிப் தொடக்க விழா சென்னை மணப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் பரிசு கோப்பை, தமிழக அணியின் ஜெர்சியை ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஜாங்கிட், நடிகர் சரத்குமாரின் மகன் ராகுல் இருவரும் அறிமுகம் செய்து வைத்தனர். இந்த போட்டியில் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு அணியும், எதிர் அணிகளுடன் தலா இரண்டு முறை மோத உள்ளன. ஆவடியில் உள்ள ஏஎம்எஸ் கல்லூரியில் இன்று தொடங்கும் இந்த போட்டிகள் வரும் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் திறமை வெளிப்படும் என்று ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜாங்கிட் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்