"வார்த்தை ஜாலங்களால் ஏமாற்றுகிறார்கள்" - நத்தம் விஸ்வநாதன் பரபரப்பு பேச்சு

x

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டு

திராவிட மாடல் எனக் கூறி மக்களை திமுக ஏமாற்றி வருவதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அதிமுக சார்பில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், திராவிட மாடல், ஒன்றிய அரசு என பல்வேறு வார்த்தை ஜாலங்களை சொல்லி திமுக மக்களை ஏமாற்றி வருவதாக கூறினார்.

மேலும், மின் கட்டண உயர்விலிருந்து மக்களை திசை திருப்பவே சோதனைகள் நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்