"3 ரன்ல மேட்ச் மிஸ் ஆனதுக்கு இவங்க மட்டும் தான் காரணம்" - வெளிப்படையாக பேசிய தோனி

x

மிடில் ஓவர்களில் ஸ்ட்ரைக் ரொடேட் செய்யாததே தோல்விக்கு முக்கிய காரணம் என சென்னை கேப்டன் தோனி கூறி உள்ளார். ராஜஸ்தான் உடனான போட்டியில் தோல்வி அடைந்த பிறகு பேட்டியளித்த அவர், மைதானம் பெரிய அளவில் ஸ்பின்னர்களுக்கு உதவவில்லை என்றும், ராஜஸ்தான் அணியில் அனுபவம் வாய்ந்த ஸ்பின்னர்கள் இருப்பதாகவும் கூறினார். பேட்டர்கள்தான் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறிய தோனி, சென்னை பவுலர்கள் சிறப்பாக பந்து வீசியதாகப் பேசினார். கேப்டனாக 200வது போட்டி போன்ற சாதனை நிகழ்வுகளை தான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும், அணிக்கு பங்களிப்பதுதான் முக்கியம் என்றும் தோனி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்