ஹெல்மட் அணியாமல் வந்த இளைஞர்கள்...அலேக்காக பிடித்த போலீஸ் - தேவர் சிலைக்கு மரியாதை

x

ஹெல்மட் அணியாமல் வந்த இளைஞர்கள்...அலேக்காக பிடித்த போலீஸ் - தேவர் சிலைக்கு மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை நந்தனம் அருகில் உள்ள தேவர் சிலைக்கு ஏராளமானோர் மரியாதை செலுத்தி வருகின்றனர். அதில், ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்களை மடக்கி பிடித்த போலீசார், அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் போலீசாரிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நீடித்து நிலையில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், போலீசாரிடம் மன்னிப்பு கோரினர். இதனை தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை இளைஞர்களிடத்தில் ஒப்படைத்த போலீசார், அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்