"தங்கச்சி கல்யாணத்தை பார்க்க விடல..டவரில் ஏறி தற்கொலை முயற்சி..இறங்கி வாப்பா நிறைய வேலை இருக்கு"

x

திருப்பூரில், உயர் மின் கோபுரத்தில் ஏறி மதுபோதையில் இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். சம்பவ இடத்துக்கு சென்ற திருப்பூர் தெற்கு போலீசார், நான்கு மணி நேரம் போராடி, அந்த இளைஞரை மீட்டனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பதும், திருப்பூரில் வெல்டிங் ஒர்க்‌ ஷாப்பில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மதுரையில் தனது தங்கை திருமணத்துக்கு சென்ற போது, கோயிலில் தாலி கட்டுவதை பார்க்க பெற்றோர் அனுமதிக்கவில்லை என்பதால், தற்கொலைக்கு முயன்றது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, உடல் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ரமேஷை அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்