"சோறு ஆக்கக் கூட அடுப்பு இல்லை.. குழந்தைகள் உணவின்றி பட்டினியில் கிடக்கின்றனர்" - கண்ணீருடன் கதறும் மக்கள்

x

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், உணவு, குடிநீரின்றி தவிப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளனர்.

கீழகுண்டலபாடி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இது குறித்து தகவல் அளித்தும் இதுவரை ஒரு அதிகாரிகள் கூட ஆய்வு செய்ய வரவில்லை என அந்த மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

குழந்தை வைத்துக் கொண்டு குடிநீர், உணவு இன்றி பரிதவிப்பதாகவும், கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் என்பதால் நிவாரண முகாம்களுக்கு செல்ல முடியவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்