"சிலிண்டர் வெடித்ததால் மட்டும் விபத்து நிகழ வாய்ப்பில்லை" - அதிகாரி சொன்ன அதிர்ச்சி தகவல்

x

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நிகழ்ந்த வெடி விபத்து சிலிண்டர் வெடித்ததால் மட்டும் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை, என தேசிய வெடி மருந்து மற்றும் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். தேசிய பெட்ரோலிய வெடி மருந்து மற்றும் பாதுகாப்பு அலுவலக துணை கட்டுப்பாட்டாளர் ஸ்ரீ அகில் நந்தி, விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தார். பின்னர், சம்பவம் நடைபெற்ற இடங்களை அதிகாரிகளுடன் ஆய்வு செய்த அவர் பல்வேறு தடயங்களை ஆய்வு செய்தார். பின்னர், சிலிண்டர் வெடித்ததால் மட்டும் விபத்து நடந்ததிருக்காது என்றும் வேறு ஏதாவது காரணம் இருக்கும் என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்