"எங்க ஏரியா உள்ள வராதே"... விளையாடும் இடத்தில் சிலை வைத்ததால் பரபரப்பு... பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் பள்ளிக்கு அருகே திடீரென கோயில் கட்டி சிலை வைத்ததால் மானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், கள்ளக்குறிச்சி மாவட்டம், தொழுவந்தாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு அருகில் உள்ள புறம்போக்கு இடத்தில் தனிநபர் ஒருவர் திடீரென கோயில் கட்டி சிலை வைத்துள்ளார். தாங்கள் விளையாடும் இடத்தில் திடீரென கோயில் இருப்பதைக் கண்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com