"காவல் துறை அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது" - டிஜிபி சைலேந்திர பாபு

x

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பு வகித்து வரும் டிஜிபி சைலேந்திரபாபு, வரும் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில், பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், டிஜிபி சைலேந்திரபாபு ஓய்வு பெற்றாலும் அவரது ஆற்றலை கண்டிப்பாக தொடர்ந்து பயன்படுத்துவோம் எனத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் ஜின்னா, நீதிமன்றத்திற்கு வருவதை கௌரவ குறைச்சலாக சிலர் நினைக்கும் நேரத்தில், சைலேந்திர பாபுவும், சங்கர் ஜிவாலும் அதை முறியடித்தனர் என்று கூறினார். தொடர்ந்து பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, நீதியை நிலைநாட்ட வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டில் கடந்த 8 மாதங்களில் காவல் நிலையங்களில் எந்த மரணமும் நிகழவில்லை என்பதோடு காவல் நிலைய துன்புறுத்தல்கள் குறித்த புகார்கள் குறைந்துள்ளன என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்