கடைக்குள் புகுந்த ராக்கெட்... கலவர காடான கடைத்தெரு... சரமாரியாக மோதிக்கொண்ட பரபரப்பு காட்சி

x

தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் பட்டாசு வெடிப்பதில் இரண்டு கடைக்காரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யூனியன் அலுவலகம் தெருவில் அடுத்தடுத்து கடைகளாக கோழிக்கடை மற்றும் பேன்சி ஸ்டோர் பல வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த இரண்டு கடைக்காரர்களுக்கும் இடையே சிறு சிறு தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தீபாவளி அன்று இருவரும் மாறி மாறி பட்டாசு வெடித்ததில், ஒரு ராக்கெட் பட்டாசு அருகில் இருந்த கடைக்குள் புகுந்ததால் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்