ஏ., எப்புரா... தீக்குச்சிய வைச்சி மேஜிக்லா காட்டுறிங்க! - எழுத்தை அழிக்கும் வீடியோ வைரல்

x
  • தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, தீக்குச்சி மூலம் எழுத்தை அழித்து, நூதன முறையில் அனுமதி சீட்டை திருத்தி மண் திருட்டில் ஈடுபடும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
  • ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாலக்கோம்பை பகுதியில் செயல்படும் மண் குவாரியில், மண் அள்ளுவதற்காக வழங்கிய அனுமதி நடை சீட்டை, பலமுறை பயன்படுத்தும் விதமாக, நடைசீட்டில் எழுதப்பட்ட எழுத்துக்களை எரியும் தீக்குச்சியினால் அளித்து, மீண்டும் அதே சீட்டை பயன்படுத்தி மண் திருட்டு நடைபெற்று வருகிறது.
  • நடை சீட்டின் எழுத்துக்களை தீக்குச்சி மூலம் அழிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
  • மேலும், இந்த நூதன முறையை பயன்படுத்தி மாவட்ட நிர்வாகம் வழங்கிய இடத்தில் மண் அள்ளாமல், தெப்பம்பட்டி, பாலக்கோம்பை, ஜக்கம்மாள்பட்டி, கணேசபுரம், ஜி.உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
  • இதனால் அரசுக்கு பல லட்சக்கணக்கான வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நூதன முறையில் சட்டவிரோதமாக நடைபெறும் மண் திருட்டை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்