கஞ்சா வியாபாரிகளை பிடித்த போலீசார் - வழிமறித்து தாக்கிய உறவினர்கள் | Theni

x

தேனியில் கஞ்சா வியாபாரிகளை பிடித்த போலீசாரை தாக்கிய 19 பேர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, கஞ்சா விற்பனை தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்ற காவலர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த, இருவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். அப்போது, அங்கு வந்த அவர்களின் உறவினர்கள், போலீசாரை வழிமறித்து தாக்கியதுடன், இருவரையும் அழைத்து சென்றுள்ளார். இதுதொடர்பாக, தேனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், 19 பேர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்