தொழிலதிபர் தாக்கப்பட்டு காரில் கடத்தல் ? - கடத்தல்காரர்களுக்கு போலீசார் வலை

• தேனி மாவட்டம் கம்பம் அருகே தொழிலதிபரை மர்மநபர்கள் தாக்கி காரில் கடத்தி சென்றதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • கம்பம் அருகே ராயப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அதிசயம். • தொழிலதிபரான இவர், கோழிப்பண்ணை, திராட்சை தோட்டம், ரியல் எஸ்டேட் என பல தொழில்கள் செய்துவந்துள்ளார். • இவர் நடைபயிற்சி செல்லும் போது, காரில் வந்த மர்மநபர்கள் அதிசயத்தை தாக்கி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. • இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள் அதிசயத்தின் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். • இதையடுத்து, தொழிலதிபர் அதிசயத்தின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com