வந்தது அடுத்த ஆபத்து...சதையை உண்ணும் பாக்டீரியாக்கள்

x

கடல் பாசிகளில் சதையை உண்ணும் பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி அட்லாண்டிக் பெருங்கடலின் குறுக்கே கடந்து செல்லும் கடற்பாசிகளில் சதையை உண்ணும் கொடிய பாக்டீரியாக்கள் இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக அதிர்ச்சிகர ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. கடலில் போடப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் விப்ரியோ பாக்டீரியாக்களுடன் கடற்பாசி எவ்வாறு தொடர்பு கொள்கிறது என புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. அதில், உருவான நோய்க்கிருமிகள் கடல் வாழ் உயிரினங்களையும் பொது சுகாதாரத்தையும் பாதிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த விப்ரியோ பாக்டீரியாக்கள் பாதித்த கடலுணவை உண்பதன் மூலமாகவோ, காயம் மூலமாகவோ கடல் நீர் வழியாக பரவி தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சதை உண்ணி என அறிவியலாளர்கள் அழைக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்