"இன்ஸ்டாவில்" திருட்டுக்கு பிளான்..கொள்ளையர்களின் பலே ஐடியா..தட்டி தூக்கிய போலீஸ்

x

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ளன வாணி, மெய்யேந்தல் கிராமங்கள்.இந்த கிராமங்களில் கடந்த 3 ஆண்டுகளாக பல வீடுகளில் பீரோ உடைக்கப்பட்டு, நகை பணங்கள் திருடப்பட்டன. மூன்று ஆண்டுகளில் சுமார் 67 சவரன் நகைகளும், பல லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரனை நடத்தி வந்தனர்.சிசிடிவி காட்சிகள், மற்றும் திருடப்பட்ட இடத்தில் கிடைத்த செல்போன் சிக்னல் என பல கோணங்களில் அலசி ஆராய்ந்தும் சிறு துப்பு கூட துளங்கவில்லை.போலீசாருக்கே டஃப் கொடுத்து பல கொள்ளைகளை தடையமே இல்லாமல் திருடியது யார் என ஒட்டுமொத்த காவல் துறையும் குழம்பி தவித்திருக்கிறது.

இந்நிலையில் தான் போலீசாரின் சைபர் மூளை விசாரனையில் இறங்கி உள்ளது.திருடப்பட்ட இடங்களில் இருந்த செல்போன் சிக்னலை ட்ரேஸ் செய்து, அந்த செல்போனில் இயங்கிய சமூக வலைதளங்களை ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அப்போது தான் கொள்ளை கும்பல் இன்ஸ்டாகிராமில் ப்ளான் போட்டு கொள்ளையை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த அக்கவுண்டை ஹாக் செய்து ராஜ்குமார், பால்பாண்டி, சண்முகநாதன், சாந்தகுமார், மற்றும் சூர்யா,ஆகிய 5 பேர் கொண்ட திருட்டு கும்பலை போலீசார் கைது செய்து விசாரித்திருக்கிறார்கள்.

அப்போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. ஆம்...கைது செய்த இந்த பஞ்ச திருடர்களும் கொலை கொள்ளையில் ஊறி உருவானவர்கள்.ஒவ்வொருவரின் மீதும் கொலை கொள்ளை உட்பட 23 வழக்குகள் நிலுவையில் இருந்திருக்கிறது.

காசுக்காக வழிப்பறி செய்வது, பைக் திருடுவது, வீடு புகுந்து கொள்ளையடிப்பது, கூலிப்படையாக செயல்பட்டு கொலை செய்வது என ஒட்டுமொத்த குற்றங்களின் உறைவிடமாக இருந்துள்ளனர். மேலும், நார்மல் மெசேஜ் , நார்மல் கால் செய்தால் போலீசில் சிக்கி கொள்ள வாய்ப்பு அதிகம் இருப்பதால், இவர்களின் டீலிங் அனைத்தும் இன்ஸ்டாவிலே நடந்திருக்கிறது.கிரைம் ஸ்பாட், டேட், டைம், ப்ளான், ஸ்கெட்ச் என அனைத்தையும் இன்ஸ்டா கால், இன்ஸ்டா சேட்டிங்கின் மூலமே செய்திருக்கிறார்கள்.திருடிய பணத்தில் சென்னையில் உல்லாசமாக இருந்த போது தான் போலீசார் இந்த ஐவர் கூட்டணியை துண்டாக தட்டி தூக்கி இருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஐவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இவர்களிடம் இருந்து 57 சவரன் நகையையும்,2 பைக்கையும் பறிமுதல் செய்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்