திருடிய வீட்டிலேயே சாவகாசமாக அமர்ந்து சாப்பிட்டு சென்ற சோத்துமூட்டை திருடன் | Theft | Food

திருடிய வீட்டிலேயே சாவகாசமாக அமர்ந்து சாப்பிட்டு சென்ற சோத்துமூட்டை திருடன்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே, வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை, 40 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனத்தை திருடிவிட்டு, கொள்ளையடித்த வீட்டிலேயே சாவகாசமாக உணவருந்திச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளியான ராமலிங்கம் என்பவர், சிகிச்சைக்காக சென்னைக்கு சென்றார். அதன் பிறகு, பூட்டியிருந்த வீட்டில் கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com