தீடிர் கோஷம்... கருத்தரங்கில் பரபரப்பு - பேச்சை நிறுத்திய ராகுல்

x

அமெரிக்காவில் கருத்தரங்கம் ஒன்றில் ராகுல் காந்தி உரையாற்றியபோது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்களுடனான கருத்தரங்கில் உரையாற்றினார்.

அப்போது, அங்கிருந்த சில காலிஸ்தான் ஆதரவாளர்கள், காலிஸ்தான் வாழ்க என முழக்கங்களை எழுப்பியதுடன், காலிஸ்தான் இயக்க கொடியையும் கையில் ஏந்தினர்.

இதனால் தனது பேச்சை ராகுல் காந்தி சிறிது நேரம் நிறுத்தினார்.

காலிஸ்தான் ஆதரவு முழக்கங்களை எழுப்பியவர்கள், அமெரிக்காவில் செயல்படும் Sikh for Justice என்ற காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தினர் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்