ஏஞ்சலினா போல் மாற ஆசைப்பட்டு ஜாம்பியான பெண் - முகம் ஜாம்பியாக மாறிய ரகசியத்தை கூறிய பெண்

x

பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜூலி போல் மாற வேண்டும் என அறுவை சிகிச்சைகள் செய்ததால், ஜாம்பி போல் கோரமாக முகம் மாறியதாக கூறிய பெண்ணின் ரகசியம் வெளியானது. ஈரானை சேர்ந்த சாகர் தாபர் என்ற பெண் 2017ம் ஆண்டு தனது கோரமான புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். ஏஞ்சலினா ஜூலி போல் மாற ஆசைப்பட்டு 50 அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டதால் தனது முகம், ஜாம்பி போல் மாறி விட்டதாக சாகர் தாபர் கூறி இருந்தார். இந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், சாதாரண பெண்ணாக காட்சியளித்தார். அப்போது பேசிய சாகர், மேக்-அப் மூலம் தனது முகத்தை ஜாம்பியாக மாற்றியதாகவும், அறுவை சிகிச்சையால் முக அமைப்பு மாறவில்லை என்றும் கூறி அதிர்ச்சி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்