குமரியில் அட்ராசிட்டி செய்த ராணுவ வீரரை அடித்து தூணில் கட்டி வைத்த இளைஞர்கள்

x

கன்னியாகுமரியில், மதுபோதையில் தகராறு செய்த ராணுவ வீரரை இளைஞர்கள் இரும்புத்தூணில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவட்டார் பகுதியை சேர்ந்த ராணுவ வீரரான ரதீஷ்குமார் என்பவர், ஆற்றூரில் மது அருந்திவிட்டு தள்ளாடியபடி, சாலையில் சென்றவர்களிடம் வாகனங்களை வழிமறித்து தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிலர், மதுபோதையில் இருந்த ரதீஷ்குமாரை கீழே தள்ளிவிட்டு மிதித்து, இரும்பு தூணில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். ரத்தக்காயங்களுடன் கிடந்த ரதீஷ்குமாரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ரதீஷ்குமாரை தாக்கிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்